தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள் வாக்காளர்கள் நீக்கம்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 1,62,527 பேர் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026ன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் - ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டார். அதன்படி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 197947 வாக்காளர்கள், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 236461 வாக்காளர்கள், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 222631 வாக்காளர்கள், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 207054 வாக்காளர்கள், ஓட்டப்பிடாரம்(தனி) சட்டமன்ற தொகுதியில் 232536 வாக்காளர்கள், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 231529 வாக்காளர்கள் என மொத்தம் 1,32,81,558 வாக்காளர்கள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 649224 ஆண்கள், 678752 பெண்கள், 182 இதரர் என மொத்தம் 1,32,81,558 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 162527 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம். இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சே...